நண்பனை பழிவாங்கும் நோக்கில் துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர் கைது!

மாளிகாவத்தையில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சந்தேகநபரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ​​கெசல்வத்தையில் பொடி கவி என்பவரை கொலை செய்தமைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாளிகாவத்தையில் மோட்டார் சைக்கிள் சேவை நிலையத்தை திறந்து வைத்த நபர் ஒருவரை இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த உரிமையாளர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மாளிகாவத்தை நெவில்லின் உறவினர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டனர்.

அதன்படி நடத்தப்பட்ட விசாரணைகளில் இது தொடர்பான துப்பாக்கிச் சூட்டுக்கு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் வாழைத்தோட்டத்தை சேர்ந்த சுகத் புஷ்ப குமார என்ற கசுன் எனத் தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று மல்வான பிரதேசத்தில் தலைமறைவாகியுள்ளமை தெரிய வந்துள்ளது.

விசாரணை

சந்தேக நபர் ஹெரோயின் கொள்வனவு செய்வதற்காக வெல்லம்பிட்டிய பிரதேசத்திற்கு வருவதை விசாரணை அதிகாரிகள் பின்னர் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் 05 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் சிறுவயதில் இருந்த அவரது நெருங்கிய நண்பரான பொடி கவியைக் கொலை செய்ததற்கு பழிவாங்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தெரியவந்தது.

பொடி கவியின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் நோக்கில் இதனை செய்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

Previous articleவாகன விபத்தில் இருவர் படுகாயம்!
Next articleவெளிநாட்டு பெண் ஒருவர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு!