வெளிநாட்டு பெண் ஒருவர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு!

கல்கிஸ்ஸை அடுக்குமாடி குடியிருப்பொன்றின் வீட்டில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்தோடு உயிரிழந்த பெண் இங்கிலாந்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.

பேஸ்புக் ஊடாக வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவருடன் அறிமுகமாகி பின்னர் இருவருக்கும் இடையில் காதல் உறவு ஆரம்பமாகியுள்ளது.

உயிரிழந்த பெண்

இந்நிலையில் அப் பெண் இணையவழியில் முன்பதிவு செய்து அல்விஸ் மாவத்தையில் உள்ள அடுக்குமாடி தொகுதியில் வீடொன்றை வாடகை அடிப்படையில் பெற்று கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வந்து தங்கியிருந்துள்ளார்.

அவர் நாளை (10) மீண்டும் இங்கிலாந்து செல்லவிருந்த நிலையில் இன்று அதிகாலை இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Previous articleநண்பனை பழிவாங்கும் நோக்கில் துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர் கைது!
Next articleஇன்றைய ராசிபலன்10.09.2023