கைதியை கழிவறைக்கு அழைத்து சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்கள வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட ஹரக் கட்டாவை கழிவறைக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் அதிகாரி தற்போது காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு மாயமான பொலிஸ் அதிகாரியின் புகைப்படம் தற்போது பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியை அடையாளம் காண்டால் 071-85917774 அல்லது 0718594929 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

கழிவறைக்கு சென்ற “ஹரக்கட்டா” தனது கைகளுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளது போன்று நடித்தவாறு வௌியே வந்தார். அப்போது, ​​ “ஹரக்கட்டா” தனது பாதுகாப்பிற்கு இருந்த விசேட அதிரடிப்படை அதிகாரியின் துப்பாக்கியை திடீரென பறிக்க முயன்றுள்ளார்.

பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பின் போது, ​​”ஹரக்கட்டா” தனது கைவிலங்குகளை விசேட அதிரடிப்படை அதிகாரிக்கு போட முயன்றுள்ளார்.

சம்பவத்தின் போது, ​​குறித்த பொலிஸ் அதிகாரி அவ்விடத்திலிருந்து ஓடி 4வது மாடிக்கு சென்று, ​​தனது கைத்தொலைபேசிக்கு பதிலாக, வேறொரு பொலிஸ் அதிகாரியின் கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

மேல் தளத்தில் இருந்து விசேட அதிரடிப்படை அதிகாரியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற அதிகாரிகள் “ஹரக் கட்டாவை” மடக்கிப் பிடித்துள்ளனர்.

Previous articleமட்டக்களப்பில் நிலநடுக்கம்
Next articleகிளிநொச்சியில் பாடசாலை மாணவி மாயம்!