இலங்கையில் நால்வருக்கு மரண தண்டனை விதிப்பு!

  கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மேல் நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி களுத்துறை, மதினகந்த பிரதேசத்தில் ஒருவரைக் கொலை செய்து மற்றுமொருவரைப் படுகாயப்படுத்தியமை தொடர்பில் 07 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் களுத்துறை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

1, 2, 3 மற்றும் 5 ஆவது பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 1, 2, 3 மற்றும் 5 ஆவது பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 6 மற்றும் 7 ஆவது பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்தும் மேல்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

அந்த வழக்கின் நான்காவது பிரதிவாதி இறந்துவிட்டதாக மேல் நீதிமன்றத்தில் தெரியவந்த நிலையில்  நீண்ட வழக்கு விசாரணை நடந்த இந்த வழக்கில் 14 சாட்சிகளிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளது.

  சம்பவம் குறித்த நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் களுத்துறை மேல் நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.இலங்கையில்

Previous articleகிளிநொச்சியில் பாடசாலை மாணவி மாயம்!
Next articleயாழ் விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி சடலமாக மீட்பு!