யாழில் கையை இழந்த சிறுமி தொடர்பில் கொழும்பில் இருந்து விசேட குழு வருகை!

யாழ் போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதற்காக கொழும்பு சுகாதார அமைச்சின் 5 அதிகரிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு வருகை தரவுள்ளனர்.

குறித்த சிறுமி காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பெற்றோர் முறைப்பாடு
சிறுமியின் கையில் போடப்பட்டுள்ள “கனூலா” மற்றும் அவருக்கு கொடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்து செறிவூட்டப்படாமல் ஏற்றப்பட்டதாலேயே கை அகற்ற வேண்டி வந்ததாக பெற்றோர் குற்றம் சுமத்தி பொலிசில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை சிறுமி கையை இழந்தமைக்கு அப்பொது கடமையில் இருந்த தாதியே காரண்ம் என குற்றம் சுமத்தப்பட்டிருந்ததுடன், அந்த தாதிமீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

அதன் மீதான வழக்கு நடவடிக்கை இடம் பெற்று வரும் நிலையில் தாதையை நாட்டைவிட்டு வெளியேற நீதிமன்றம் தடைவித்திருந்தது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணையை நடத்துவதற்காக கொழும்பு சுகாதார அமைச்சை சேர்ந்த 5 சுகாதார அதிகாரிகள் யாழ் போதனா மருத்துவமனைக்கு வருகை தந்து விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழ் விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி சடலமாக மீட்பு!
Next articleயாழ் விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி சடலமாக மீட்பு!