யாழ் விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி சடலமாக மீட்பு!

  யாழ்ப்பாணம் – திருநெல்வேலிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியின் சடலம்  இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகின்றது.

குறித்த சிறுமி தனது பாட்டியுடன் விடுதிக்கு  வந்ததாக கூறப்படுவதுடன்,  மூன்று நாட்களுக்கு முன்னரே சிறுமி இறந்திருக்கலாம் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் ,  உயிரிழந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என  சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Previous articleயாழில் கையை இழந்த சிறுமி தொடர்பில் கொழும்பில் இருந்து விசேட குழு வருகை!
Next articleஇன்றைய ராசிபலன்13.09.2023