அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பரவல்!

  கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடொன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆராமய வீதிப் பகுதியில் அமைந்துள்ள சியபஸ்செவன தொடர்மாடி குடியிருப்பில் இன்று புதன்கிழமை (13) இந்தத் தீ பரவியுள்ளது.

உயிர் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை

தீயணைப்பு பிரிவினர், தெமட்டகொடை பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் வீட்டில் இருந்த சொத்துக்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

தீ பரவல் ஏற்பட்டபோது வீட்டில் எவரும் இருக்கவில்லை என்பதனால் உயிர் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.

தீ விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில் தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.