கேரளாவில் புதிய வைரஸ் தொற்றால் இருவர் உயிரிழப்பு!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 2 இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன .

நிபா வைரஸால் மூளை செல்களை அழிந்து, உமிழ்நீருடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களிடையே பரவுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிகிச்சை இதுவரை கண்டறியப்படவில்லை

அதோடு இதற்கான சிகிச்சை இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனினும் தமிழ்நாட்டில் அதன் பாதிப்பு இல்லை எனவும் கூறப்படுகின்றது.

கடந்த 1998-ம் ஆண்டில் மலேசியாவில் முதல்முறையாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இது பெரும்பாலும் பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்தும் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது.

Previous articleஅடுக்குமாடி குடியிருப்பில் தீப்பரவல்!
Next articleஇன்றைய ராசிபலன்14.09.2023