விமான விபத்தில் 14 பேர் உயிரிழப்பு!

பிரேசிலின் அமேசான் மாநிலத்தின் பார்சிலோஸ் பகுதியில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர்  பலியாகினர் என அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து மாநில தலைநகரான மனாஸிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள பார்சிலோஸ் மாகாணத்தில் நடந்துள்ளது.

விமானத்தில் 12 சுற்றுலாப் பயணிகளும், ஒரு விமானி மற்றும் துணை விமானியும் இருந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை என்று பிரேசிலின் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் பொழுதுபோக்கிற்காக மீன்பிடிப்பதற்காக அந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரங்களை பிரேசிலின் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Previous articleஇன்றைய ராசிபலன்17.09.2023
Next articleஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட அறிவித்தல்