காட்டு யானை தாக்கி இருவர் பலி

ஹதுன்கம மற்றும் மஹாஓயா பிரதேசங்களில் இடம்பெற்ற காட்டு யானைகளின் தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மஹாஓயாஇ பொரபொல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 82 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாக்கினிகல மலை பகுதிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் ஹதுன்கமஇ ஹிம்பிலியாகட பகுதியில் காட்டு யானை தாக்கி 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அருகில் உள்ள வீட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற அவர்இ வீடு திரும்பாத நிலையில் பிரதேசவாசிகள் மற்றும் வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போதே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleவெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் 80சதவீதமான இலங்கையர்கள்
Next articleஇன்றைய ராசிபலன்18.09.2023