சீரற்ற காலநிலையால் 644 பேர் பாதிப்பு!

 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 164 குடும்பங்களைச் சேர்ந்த 644 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் இன்றைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 151 குடும்பங்களைச் சேர்ந்த 594 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளப்பெருக்கினால் 60 குடும்பங்களைச் சேர்ந்த 232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

36 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள அதேவேளை இதுவரை காயங்களோ, உயிரிழப்புகளோ எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.