சிறுவனை போதைக்கு அடிமையாக்கி துஷ்பிரயோகம் செய்த சாரதி!

போதை இனிப்பு (toffee) கொடுத்து 11 வயது சிறுவனை பலமுறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாடசாலை பேருந்து சாரதி ஒருவர் குருநாகல் பொலிஸ் மகளிர் பணியகத்தினால் நேற்று (14.10.2023) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பேருந்து சாரதிக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அதனை நிறைவேற்ற தவறியதால் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.