இன்றும் நாளையும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது!

அனுராதபுரம் மாவட்ட காரியாலயத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதை இன்றும் (16) நாளையும் (17) தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த அலுவலகத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும் அந்த அலுவலகத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த இரு தினங்களில் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான முன்பதிவை மேற்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் விரும்பும் மற்றுமொரு நாளில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.