இஸ்ரேலில் காணாமல்போன இலங்கை பெண் உயிரிழந்துள்ளார்

இஸ்ரேலில் காணாமல்போன இலங்கை பெண் உயிரிழந்துள்ளார் என்பதை இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இஸ்ரேலிற்கான இலங்கை தூதுவர் இதனை உறுதி செய்துள்ளார்.

அனுல ஜயதிலக என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதையே இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

அடுத்த இரண்டு நாட்களிற்குள் அவரின் உடலை இஸ்ரேலிய அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளனர்.