யாழில் அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 01 கிலோவுக்கும் அதிகமான TNT என்ற அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று (17) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சூட்சமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உள்ள ஜெட்டிக்கு அருகில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.

வெடிமருந்துகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்த அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்களை மறைத்து வைத்திருக்கக்கூடும் என  கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.