கிளிநொச்சியில் மீட்க்கப்பட்ட அபாய பொருட்கள்

கிளிநொச்சியில் பூநகரி எட்டாம் கட்டை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பத்து மோட்டார் குண்டுகள் இருப்பதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிசார் 60MM குண்டுகள் 08, 04 MM 01 குண்டு ஒன்று, கைக்குண்டு ஒன்று ஆகியவற்றை பார்வையிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன் இன்றையதினம் சிறப்பு அதிரடிப்படையினரால் அவ் வெடி பொருட்கள் செயலிழக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.