யாழ் அக்காவல் விபரீத முடிவெடுத்த கனடா தங்கை!

  கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதான இளம் குடும்பப் பெண் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பெண்ணின் சகோதரியால் ஏமாற்றப்பட்ட நிலையில், அவர் இந்த விபரீத முடிவை மேற்கொண்டதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் அறியக்கிடைக்கையில்,

தங்கையின் பணத்தில் தனக்கு காணி வாங்கிய யாழ் அக்கா

தற்கொலைக்கு குடும்பப் பெண்ணின் மூத்த சகோதரி யாழ்ப்பாணத்தில் வசிக்கின்றார்.

இந்நிலையில் கடந்த வருட தொடக்கத்தில் யாழ் அரியாலைப் பகுதியில் உள்ள காணி ஒன்றை தனது பெயரில் கொள்வனவு செய்வதற்காக யாழில் உள்ள சகோதரியை நம்பி 1 லட்சத்து 35 ஆயிரம் கனடா டொலரை அனுப்பியுள்ளார்.

அந்த பணத்தை கனடாவில் உள்ள பலரிடம் கடன் பெற்றே அவர் வாங்கி அனுப்பியதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள சகோதரி காணியை தனது பெயரில் பதிவு செய்துவிட்டு கனடாவில் உள்ள சகோதரி மற்றும் அவரது கணவனின் பெயரில் போலியான உறுதியை தயாரித்து அனுப்பியதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் கடந்த மாதம் கனடா குடும்பப் பெண்ணின் கணவன் யாழ்ப்பாணத்துக்கு வந்து காணி தொடர்பாக ஆராய்ந்த போதே அந்தக் காணி தனது பெயரில் பதிவு செய்யாது தனது மனைவியின் சகோதரியின் பெயரில் பதிவு செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

யாழிற்கு வந்த தங்கையின் கணவருக்கு அதிர்ச்சி

அதன் பின்னர் பொலிசார் மற்றும் சட்டத்தரணிகளிடம் சென்றும் பலனில்லாது போனதையடுத்து கனடா சென்ற கணவர் மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.

தனது சகோதரியுடன் தங்கை பேச்சுவார்த்தை நடாத்தியும் பலனில்லாது போனதை அடுத்தே தற்கொலைக்கு முயன்று அவர் காப்பாற்றப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

அதேவேளை புலம்பெயர் தேசங்களில் எமது உறவுகள் , கடும் பனியிலும் , நித்திரையின்றியும் சேமிக்கும் பணத்தில் தாயத்தில் தனகென ஓர் இடம்வேண்டும் என்பதற்காக தமது உறவுகளை நம்பி மோசம்போன சம்பங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளது.

அத்துடன் ஏமாற்றப்பட்டவர்கள் இவ்வாரு விபரீத முடிவுகளுக்கு சென்ற சம்பவங்களும் யாழ்ப்பாதணத்தில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.