உலக நீரிழிவு தினம்

உலக நீரிழிவு தினம் இன்று. டைப் 2 நீரிழிவு நோயாளிகள் ஆரம்ப கட்டத்தில் சில எளிய மாற்றங்களை செய்வதன் மூலம் அது இரத்த சர்க்கரை அளவை குறைக்க செய்யும்.

இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதோடு,  நாளடைவில் நீரிழிவு நோயை குறைக்க செய்யும்.

டைப் 2 நீரிழிவு நோய் உறுதிபடுத்திய நிலையில் அது கடினமான சவாலானதாக இருக்கலாம்.

நோய்க்கான காரணம்

உணவு முறை, வாழ்க்கை முறை, சப்ளிமெண்ட் போன்றவற்றின் மூலம் நீரிழிவு தொடர்புடைய பக்கவிளைவுகளை மாற்றியமைக்க முடியும். பெருமளவு பாதிப்பை தடுக்க முடியும் என்பதால் இது குறித்த விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.

டைப்2 சர்க்கரை நோய்க்கு பல காரணங்கள் உண்டு. உட்கார்ந்த வாழ்க்கை முறை, மாறிய உணவுபழக்கம், சமநிலையற்ற உணவுகள், அதிகப்படியான கார்போஹைட்ரேட், அதிக மன அழுத்த அளவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சேர்ப்பது, நீரிழிவு நோயை உண்டு செய்திருக்கலாம். அதனால் காரணங்களை கண்டறிந்து செயல்படுவது நல்லது.

தடுக்கும் முறை

டைப் 2 நீரிழிவு என்பது உடலில் அதிகப்படியான கொழுப்பு படிவதால் ஏற்படுகின்றது.

சர்க்கரை நோயாளிகள் ஒவ்வொரு வேளை உணவுக்கு பிறகும் சிறிய நடைபயிற்சி செய்வது இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கும். அத்துடன் இன்சுலின் எதிர்ப்பையும் வளர்க்கும்.

சக்கரை நோயை கட்டுப்படுத்தல்

பால், தயிர், பாலாடைக்கட்டி என்னும் சீஸ், கடல் உணவுகள், முட்டை, ஆட்டிறைச்சி  இவை அனைத்தும் கொழுப்பு நிறைந்தவை. இந்த உயர் கொழுப்பு உணவை தவிர்ப்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

அனைத்து நிறங்களின் காய்கறிகள், கொட்டைகள், எண்ணெய் வித்துக்கள், முழு பருப்பு வகைகள், மூலிகைகள் மற்றும் மசாலா பொருள்கள் அடங்கிய உணவுகள் உங்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை அளிக்கும். 

தண்ணீர் 

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நீரிழிவு அசிட்டோசிஸ் தடுக்கும். தினசரி 8 முதல் 12 டம்ளர் வரை தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானது.

நீரிழிவு குறித்த எந்த அறிகுறிகளையும் அலட்சியப்படுத்த வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையை முறையாக பெற்று உணவு முறை வாழ்க்கை முறை மாற்றுவதன் மூலம் நீண்ட காலம் பக்கவிளைவுகளை தடுக்கலாம். இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கலாம்.