யாழ் மாநகரசபை தொடர்பில் மக்கள் விசனம்

யாழில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும்மழையினால் கஸ்தூரியார் வீதியிலும், ஸ்ரான்லி வீதியிலும் வெள்ள நீர் தேங்கிக் காணப்படுவதாகத் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து யாழ் மாநகர சபைக்கு அறிவித்தும் இதுவரை காத்திரமான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதேவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.