சுவர் இடிந்து விழுந்ததில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

வெல்லம்பிட்டியவில் பாடசாலை மதில் இடிந்து விழுந்ததில் மாணவன் ஒருவன்உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்

சம்பவத்தில் காயமடைந்த ஐந்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரும் அவதுக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் பாடசாலையில், மதில் விழுது மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.