யாழில் இடை நடுவில் மாணவர்களை தவிக்கவிடும் பேருந்து!

  யாழ்ப்பாணம் பருத்தித்துறை – கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் பழைய பேருந்து அடிக்கடி இடைநடுவில் நிற்பதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் மக்கள் அவதிபடுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று காலையில் (16) இடை நடுவில் நின்று போன பேருந்தை மீட்க வந்த பேருந்தும் இடைநடுவில் நின்றுள்ளது. இதனையடுத்து பேருந்தில் பயணித்தவர்கள் அதை தள்ளிவிட்டு அந்த பேருந்தை மீட்டுள்ளனர்.

குறித்த தடவழியில் செல்லும் பேருந்து அடிக்கடி இவ்வாறு மக்கர் செய்வதால் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளிகள் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் பேருந்து தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.