குளியலறையில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!

புத்தளத்தில் உள்ள விடுதியொன்றில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலத்தை நேற்று (2023.11.15) விற்றராசு குத்தப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தளம் பகுதியை சேர்ந்த மரியதாஸ் கிருஷாந்த 23 வயதுடைய இளைஞராவார்.

குளியலறையில் வைத்து விற்றராசினை கையில் எடுத்து கைகளினாலும் நேராக இழுக்க முற்பட்ட போது குறித்த தராசின் முன்பக்கமாக உள்ள கூர்மையான பகுதி இளைஞனின் கழுத்தில் குத்தி கடுமையாக காயத்திற்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை அதனையடுத்து,

அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.  

காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினரும் காவல்துறை தடயவியல் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.இக்பால் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தியதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.