சரிவடைந்த தங்கம்!

 நவம்பர் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில், தற்போது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறமை நகை வாங்க காத்திருந்தோர் வாங்கலாமா வேண்டாமா என்ற மனநிலையில் உள்ளனர்.

அதிரடியாக குறைந்த விலை

இந்த நிலையில் சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்

அதன் படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,635க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,616க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.36,928க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.