அவுஸ்ரேலிய அணிக்கு 241வெற்றி இலக்கு நிர்ணயம்

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தற்போது இடம்பெற்று வரும் நிலையில் இந்திய அணி 241 என்ற வெற்றி இலக்கை அவுஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் KL Rahul 66 ஓட்டங்களையும், Virat Kohli 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலியா அணி சார்பில் பந்து வீச்சில் Mitchell Starc 3 விக்கெட்டுக்களையும், Pat Cummins, Josh Hazlewood தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

இதற்கமைய, அவுஸ்திரேலிய அணிக்கு 241 என்ற ஓட்டங்கள் வெற்றி இலக்காக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.