கணவனை அடித்துக் கொன்ற மனைவி!

இபலோகம, பலுகஸ்வெவ பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவரைக் கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார்.

அவர்களது வீட்டில் நேற்று (18) இரவு இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கணவன் மனைவியை தாக்குவதற்காக கூரிய ஆயுதத்தால் பின்தொடர்ந்துள்ளார்.

அவர் வீட்டின் அறை ஒன்றில் ஓடி ஒளிந்து கொண்டதும், கணவர் வந்தவுடன், மனைவி அறையிலிருந்த கட்டையை எடுத்து தலையில் அடித்ததும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 52 வயதுடையவர் என்பதுடன், 47 வயதுடைய மனைவி இபலோகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.