ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு!

தெற்கு ஜெர்மனியில் நேற்றையதினம் (03-12-2023) கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகின்றன.

இதனால் விமான போக்குவரத்து ரயில் போக்குவரத்தும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பேயர்ன் முனிசி – யூனியன் பெர்லின் ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற இருந்த கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. மேலும், பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவால் 760 விமான சேவை பாதிக்கப்பட்டன. ஜெர்மனியின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான முனிச் மூடப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமை வரை 40 செ.மீ. அளவிற்கு பனிப்பொழிவு இருந்துள்ளது. பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 

பனிப்பொழிவு மற்றும் குறைந்த வெட்பநிலை ஆகியவற்றால் ஜெர்மனியின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.