இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய தலைவர்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டதாக இலங்கை தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் குசல் மெண்டிஸ், டெஸ்ட் அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் தலைவர் மற்றும் உப தலைவராக செயல்படுவார் என்றும் உபுல் தரங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (3) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உபுல் தரங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தில்ருவான் பெரேரா, இந்திக டி சேரம், அஜந்த மெண்டிஸ், தரங்க பதரணவிதான ஆகியோரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.