ரொறன்ரோவில் கடும் குளிர்!

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் கடும் குளிர் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முழுவதிலும் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்ந்த காற்றுடன் மறை 20 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை உணரப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 22ம் திகதி வரையில் இவ்வாறு குளிருடான வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.