வெள்ளைபடுதல் ஏன் ஏற்ப்படுகின்றது தெரியுமா?

பொதுவாகவே பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை இருக்கிறது. மாதவிலக்கு வரும் முன்னரும் வந்த பிறகும் வெள்ளைப்படுதல் வரும். இது இயல்பான விடயம் தான்.

ஆனால் சிலருக்கு வெள்ளை படுதல் அதிகமாகவோ, அரிப்பு எடுத்தாலோ, துர்நாற்றம் அடித்தாலோ, நிறம் மாறி இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

இந்த பிரச்னைகளுக்கு வீட்டு வைத்திய முறைகளும் நல்ல பலன்களை அளிக்கும். அவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வெந்தய நீர்

பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு வெந்தய நீர் ஒரு சிறந்த தீர்வாகும். இதற்கு முதலில், வெந்தயத்தை 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.

பாதியளவு தண்ணீர் வந்தவுடன் உடனே அதனை வடிகட்டி சிறிது ஆறிய பிறகு குடிக்கவும். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மாதுளை

மாதுளை சுவையானது மட்டுமல்ல பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. பெண்களுக்கு வெள்ளைப்படுதலைத் தடுக்க இது பெரிதும் உதவுகிறது.

எனவே, தினமும் மாதுளையை நீங்கள் பழமாக அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் மூலமும் எடுத்துக்கொள்ளலாம்.

இது வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கொடுக்கும்.

வாழைப்பழம்

வெள்ளைப்படுதல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வாழைப்பழம் ஒரு சிறந்த தீர்வாகும்.

எனவே, வாழைப்பழத்தை தினமும் காலை மாலை என இருவேளையிலும் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.

இந்த பிரச்சினை ஏற்பட காரணம் என்ன?

தவறான உணவுப்பழக்கங்கள் மற்றும் பழுதான உணவு பொருட்களை உண்ணுதல், சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிதல், சுய இன்பம் பழக்கம் ,மாதவிடாயை தூண்டும் மருந்துகளை உண்ணுதல், ரத்தசோகை, அதிக உடல் சூடு உடலுறவில் அடிக்கடி ஈடுபடுதல் .

மேலும் கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதது போன்ற காரணங்கள்  வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றது.