யாழில் கசிப்பு உற்பத்தியை ஒழிக்க களமிறங்கிய இளைஞர்கள்

  யாழில் சட்டவிரோத மதுபான ஒழிப்பு செயற்பாட்டில் காரைநகர் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்து வருவதுடன் , அதன் பாவனையாளர்களுக்கு அதிகரித்து வரும் நிலையில் அவற்றை தடுக்கும் நோக்குடன் காரைநக இளம் தென்றல் விளையாட்டு கழக இளைஞர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

இளைஞர்களுக்கு பாராட்டு

இதன்போது குறித்த இளைஞர்கள் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றினை முற்றுகையிட்டு , உற்பத்தி பொருட்களுடன் . ஒரு தொகை சட்ட விரோத மதுபானத்தையும் மீட்டு இருந்தனர்.

அதேவேளை , சட்டவிரோத மதுபானத்தை கொள்வனவு செய்து அவற்றை எடுத்து சென்ற இருவரை மடக்கி பிடித்து , அவர்களிடம் இருந்து அவற்றை பறிமுதல் செய்து நிலத்தில் ஊற்றி அவர்களை கடுமையாக எச்சரித்து விடுவித்தனர்.

சட்டவிரோத மதுபான ஒழிப்பு செயற்பாட்டிற்கு காரைநகர் பிரதேச சபை குறித்த இளைஞர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் யாழ்மாட்டத்தில் உள்ள ஏனய கிராம இளைஞர்களுக்கு முன் மாதியாக திகளும் காரைநகர் இளைஞர்கள் போல பிற கிராம இளைஞர்களும் முன்வந்தால் , யாழ்மாவட்டத்தில் முற்றாக சட்டவிரோத கசிப்பு உறப்த்தியை தடுக்க முடியும்.