நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணி துஷ்பிரயோகம்!

  நாட்டுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்து அவருடைய தங்க நகைகளை அபகரித்த குற்றச்சாட்டில் சுற்றுலா வழிகாட்டி உட்பட இருவரை கண்டி குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

25 வயதுடைய அமெரிக்க யுவதியிடமிருந்தே இவ்வாறு தங்க நகைகள் மற்றும் டொலர்கள் என்பன அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சோதனைக்கு யுவதி மறுப்பு

கடந்த 29 ஆம் திகதி கண்டி தங்குமிடம் ஒன்றில் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட அமெரிக்க யுவதி நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதனடிப்படியிலேயே சந்தேக நபர்கள் கைதானதுடன், யுவதியை மருத்துவரிடம் அனுப்பி அறிக்கை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் தடயவியல் மருத்துவரிடம் அறிக்கை பெற யுவதி மறுத்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அமெரிக்க யுவதியிடமிருந்து 2,400 அமெரிக்க டொலர்கள் 3,600 அமெரிக்க டொலர் பெறுமதியான தங்க நகைகள் என்பன அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.