சுகாதராத்துறையினரின் பணிப்புறக்கணிப்பால் அவதியுறும் நோயாளர்கள்

  சுகாதாரத்துறையினரின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 30 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இதன் காரணமாக வவுனியா வைத்தியசாலை நடவடிக்கைகளும் முடங்கியுள்ள நிலையில் சேவையை பெறவந்த நோயாளிக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.