இலங்கை வரும் சுற்றுலா பயணிகள்!

 கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 253 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு சுற்றுலா வந்தவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் எனவும், அந்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 399 எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதேவேளை ரஷ்யாவில் இருந்து 31 ஆயிரத்து 159 பேரும் பிரித்தானியாவில் இருந்து 16 ஆயிரத்து 665 பேரும், நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.