சுதந்திரதினத்தை முன்னிட்டு 600 கைதிகள் விடுதலை!

 நாளை இலங்கையின் 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள 600 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 34 வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.