போலியான முந்திரிப் பருப்புகளை கண்டறிவது எப்படி?

நமது உடம்பிற்கு ஆரோக்கியம் தருணம் நட்ஸ் வகைகளில் ஒன்றாக இருக்கின்றது முந்திரி. இவற்றில் தரத்தினை எவ்வாறு கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

போலியான முந்திரியை எவ்வாறு கண்டறிவது?

நீங்கள் வாங்கும் போது முந்திரியின் நிறம் மஞ்சளாக இருந்தால் அது போலியானதாகும். அதுவே வெள்ளையாக இருந்தால் நீங்கள் தாராளமாக வாங்கலாம். அதுவே பருப்பில் துளைகள், கரும்புள்ளிகள் இருக்கின்றதா என்பதையும் பார்த்து வாங்கவும்.

தரமான முந்திரிகளின் விலை சற்று உயர்வாகவே இருக்கும். ஆனால் இவை எளிதில் கெட்டுப் போகாது.

முந்திரி பருப்பின் அளவை கொண்டும் இதனை கண்டுபிடிக்கலாம். நல்ல தரமான முந்திரி என்றால், ஒரு இன்ச் நீளம் கொண்டதாக இருக்கும். அதுவே அந்த அளவிற்கு கீழேயோ, அல்லது அதிகமாக இருந்தால் போலியான பருப்பு ஆகும்.

முந்திரியை நுகரும் போது வாசனை ஆசையை தூண்டுவதாக இருந்தால் நல்ல முந்தி ஆகும்.

இதே போன்று முந்திரியின் சுவையும் அதன் தரத்தை அழகாக எடுத்துக் காட்டும். வாயில் ஒட்டாமல் காணப்பட்டால் நல்ல் முந்திரி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.