இராணுவ விதிகளை கடுமையாக்க நடவடிக்கை!

இராணுவ முகாம்களில் இருந்து துப்பாக்கிகளை வழங்குவதற்கான விதிகளை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இராணுவ முகாம்களில் இருந்து வழங்கப்படும் துப்பாக்கிகள் அவ்வப்போது கையளிக்கப்படுகின்றதா என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.

அத்துடன், ஆயுதக் காப்பாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இராணுவத் தளபதிகள் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒழுக்காற்று நடவடிக்கை
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் இடம்பெற்ற பல பாதாள உலகச்செயற்பாடுகளில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து இராணுவ விதிகளை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் இராணுவ வீரர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.