மின்சார சபை ஊழியர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில்!

மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இன்று (07) ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து மின்சார சபை ஊழியர்களையும் மீண்டும் பணியில் அமர்த்துமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று நண்பகல் 12.00 மணியளவில் கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபைக்கு முன்பாக இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தபால், புகையிரத, காப்புறுதி, வங்கி, தொலைத்தொடர்பு போன்ற பல தொழிற்சங்கங்களும் இதற்கு ஆதரவளிப்பதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.