கிளிநொச்சியில் எரிந்து சாம்பலான தும்புத் தொழிற்சாலை

   கிளிநொச்சி – கோணாவில் பகுதியில் மின்னொழுக்கு காரணமாக தும்புத் தொழிற்சாலை ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

நேற்றையதினம் இடம்பெற்ற இந்த அனர்த்ததில் 35 இலட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியான நட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் நிற்கதியாக நிற்பதாக உரிமையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

35 இலட்சத்துக்கு மேற்பட்ட   நட்டம்

சம்பவத்தின்போது தீ பரவியமையால் தும்பு மற்றும் மின் உபகரணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

அதேசமயம் கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனம் பழுதடைந்த நிலையில் இருந்தமையால் தண்ணீர் பவுசர் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகின்றது.

அதேவேளை சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.