போதைக்கு அடிமையான நபரின் மோசமான செயல்!

 போதை பொருளுக்கு அடிமையானவர் தன்னைத்தானே கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல் பஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

நபருக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் 

இந்நிலையில் தன்வசம் போதைப்பொருள் இல்லாத காரணத்தினால் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளை கத்தியால் குத்தி தன்னைத்தானே காயப்படுத்தியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை காயமடைந்த நபருக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 13 குற்றச்சாட்டுகள் காணப்படுவதாக தெரிவித்த பொலிஸார் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.