கனேடிய மக்கள் தொடர்பான ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கனேடிய மக்கள் விலைக்கழிவை எதிர்பார்த்து காத்திருப்பதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அத்துடன், பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்திருப்பதால் கனேடியர்கள் விலைக்கழிவுடைய பொருட்களை கொள்வனவு செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொருட்களின் விலைகுறைவு தற்போது சாத்தியமில்லை என அந்நாட்டு மக்கள் கருதுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பணவீக்கம்
எனவே, இவ்வாறான விலைக்கழிவுடைய பொருட்களை மக்கள் அதிகளவில் நாடிச் செல்வதாக குறித்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கனடாவில் கடந்த ஆண்டு நுகர்வுப் பொருட்களுக்கான பணவீக்கம் 11 வீதமாக காணப்பட்டதோடு அது தற்போது 3.4 வீதமாக குறைவடைந்துள்ளது.