நாட்டில் நிலவும் கடும் வெப்பம் குறித்து எச்சரிக்கை!

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களில், தற்போது நிலவும் கடும் வெப்பம் மார்ச் மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்றைய தினம் (28.2.2024) கடும் வெப்பமான வானிலை நிலவும் என திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் நாட்டின் சில பகுதிகளில், நீரோடைகள் மற்றும் கிணறுகளின் நீர் மட்டம் குறைந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு
இலங்கையில் தற்போது நிலவும் மிகவும் வெப்பமான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த எச்சரிக்கையானது இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்
மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மனித உடலால் அதிகமாக உணரக்கூடிய வெப்பநிலை நாளை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை குருணாகலில் கடந்த (26) அன்று அதிகூடிய வெப்பநிலையாக 35.5 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது.

மக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், கடும் வெயிலைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

மேலும் வெப்பமான காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.