சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்போம்!

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 எனவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உடனடியாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று (27) கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அதன் இணைத் தலைவர் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தலைமையில் நடைபெற்றது.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு,

கேள்வி – தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர்  பசில் ராஜபக்ஷ வெளிநாட்டில் இருக்கிறார். இந்த நாட்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு பணிகள் எவ்வாறு நடக்கிறது?

பதில் – கடந்த காலத்தில் பிஸியாக இருந்ததால் வெளிநாடு சென்றார். அவர் விரைவில் இலங்கைக்கு வருவார். இப்போதும் எமது அரசியல் வேலைத்திட்டம் கிராம மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அவர் வரும்போது கட்சியை பலப்படுத்தும் திட்டம் பரவலாக செயல்படுத்தப்படும்.

கேள்வி – நீங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகிறீர்களா? பொதுத் தேர்தலுக்கா?

பதில் – அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெளிவாகக் கூறியது. இரண்டு வருடங்கள் இரண்டு தேசிய தேர்தல்கள். நாட்டு மக்கள் முடிவெடுக்க இது சிறந்த வாய்ப்பு. அரசியலமைப்புக்கு புறம்பாக எந்த நேரத்திலும் தேர்தலை ஒத்திவைக்க மாட்டோம்.

கேள்வி – சரியான நேரத்தில் தேர்தல் நடைபெறுமா? அல்லது மகிந்த ராஜபக்ச போன்று முன்னைய தேர்தல் ஒன்று நடைபெறுமா?

பதில் – முன் கூட்டியே நடத்த முடியும் அத்துடன் எந்த நேரத்திலும் வைக்க முடியும். நாட்டு மக்கள் அதற்கேற்ப செயல்படுவார்கள். முந்தி வைத்தாலும் சிறந்தது மற்றும் சரியான நேரத்தில் வைத்தாலும் சிறந்தது. அரசியலமைப்புக்கு புறம்பாக நாங்கள் செயற்படமாட்டோம் என்று கூறுகிறோம்.

கேள்வி – தற்போது இலங்கையில் வெற்றி பெறப்போவதாக இரண்டு ஜனாதிபதிகள் உள்ளனர். அப்போது பொதுஜன பெரமுனவுக்கு இடம் கிடைக்குமா?

பதில் – பேஸ்புக் ஜனாதிபதியும் வாயச்சவடால் ஜனாதிபதியுமே தற்போது வாக்களிப்பின்றி வெற்றிபெற்றுள்ளனர். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று ரணில் ஜனாதிபதியாவார். நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையில் சவால்களை ஏற்றுக்கொண்ட தலைவர் யார் என்பதை இந்நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். அதன்படி, நாட்டு மக்களின் கோரிக்கையே நாட்டின் சித்தாந்தமாகிறது.

வரலாறு நெடுகிலும் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் ஒரு முக்கிய பிரச்சினையை அடிப்படையாக கொண்டு வாக்களித்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர மகிந்தவை கொண்டு வந்தனர், அதை அவர் செய்தார். மகிந்தவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்யும்படி மக்கள் சொன்னார்கள் அதை அவர் செய்தார். நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவே மைத்திரிபால சிறிசேன கொண்டுவரப்பட்டார். 

அது நடந்ததா இல்லையா என்பதை இந்நாட்டு மக்கள் தீர்மானித்தனர். கோட்டாபய ராஜபக்ச தேசிய பாதுகாப்பை உருவாக்குவதற்காக கொண்டு வரப்பட்டார். அது நடந்ததா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய் வார்கள். இம்முறை பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க இந்த முறையை மாற்றுவதாகக் கூறி அதை நிரூபித்த தலைவர். எனவேதான் திரு.ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென மக்கள் கருதுகின்றனர்.

கேள்வி – ரணில் விக்கிரமசிங்க தற்காலிக வருகையாளர் என்று தேசிய மக்கள் சக்தி கூறுகிறது. அவர் இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று. நாட்டைக் கட்டியெழுப்ப தேசிய மக்கள் சக்தியே சிறந்தது என்கிறார்களே.

பதில் – தேசிய மக்கள் சக்தி என்பது மக்கள் கூட்டத்தைக் காட்டும் ஒரு நாடகம் மட்டுமே. நாங்கள் கூட்டத்தை காலிமுகத்திடலுக்கு கொண்டு வந்து காலிமுகத்திடலை நிரப்பினோம், மக்கள் தானாக முன்வந்து அங்கு வந்தனர். தொடர்ந்து நடந்த உள்ளூராட்சி தேர்தலில் 45% வாக்குகள் கிடைத்தன. ஜனாதிபதி தேர்தலில் 51% வாக்குகள் கிடைத்தன. அலை என்று ஒன்று இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். 5 இலட்சத்தை 50 இலட்சமாக அதிகரிக்க 1,000 சதவீதம் அதிகரிக்க வேண்டும். 

அரசியல் வரலாற்றில் அப்படிப்பட்டவர் யாரும் இல்லை. ஜே.வி.பி பற்றி மக்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. கொலை செய்தாவது ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறார்கள். அதிகாரத்திற்காக அதிக அடக்குமுறைகளை அவர்களால் செய்ய முடியும். அதிகாரம் கிடைத்ததும் அடக்கி ஒடுக்குவேன் என்றார் லால் காந்த. நிம்மதியாக வாழும் மக்கள் ஒருபோதும் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு அதிகாரத்தைக் கொடுக்க மாட்டார்கள்.

கேள்வி – சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதை அரசு வெற்றி பெறுமா?

பதில் – அப்படிச் செய்வது நல்லது. அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது ஒரு சந்தர்ப்பம். அதனை விவாதத்திற்கு எடுத்து மிக விரைவில் வாக்கெடுப்புக்கு சென்றால் பாராளுமன்றத்தில் தனது பலத்தை காட்ட முடியும்.

கேள்வி – பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு முன்நிறுத்துமா?

பதில் – பொதுஜன பெரமுன அல்ல, வேட்பாளர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியாது. திரு.ரணில் விக்கிரமசிங்க அதைக் கேட்பாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. திரு.ரணில் விக்கிரமசிங்கவை இந்த நாட்டின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் ஆக்கியது பொதுஜன பெரமுன தான். அவர் பணியை சரியாக செய்ததை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, மொட்டுக் கட்சியாக திரு.ரணில் விக்கிரமசிங்க வந்தால் நல்லது என நினைக்கின்றேன். சுயேச்சை வேட்பாளராக வந்தால் இன்னும் நல்லது. அப்போது பயமின்றி தெளிவாக வேலை செய்யலாம் என தெரிவித்தார்.