மைத்திரியின் புதிய கூட்டணி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (01.03.2024) இடம்பெற்றிருந்தது.

மத்திய செயற்குழு கூட்டம்

குறித்த கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துஸ்மந்த மித்ரபால கூறியுள்ளார்.