அன்னத்தில் களமிறங்கும் ரணில்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெற்கு ஊடகமமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுவான ஓர் கூட்டணியின் கீழ் ரணில் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமக்கு ஆதரவான கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்துக் கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நிமால் லன்சா தலைமையிலான சிறு கட்சிகளுடனும் மொட்டு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடனும் ரணில் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, பிரமித பண்டார தென்னக்கோன் உள்ளிட்ட சிலர் ஏற்கனவே ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும் இந்த தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.