தமிழர் பகுதியில் கொத்துரொட்டியில் புழு!

     கிளிநொச்சி கனகராஜன்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் கொத்துரொட்டியில் புழுக்கள் நெளிந்து ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்து ஒன்று சாப்பாட்டிற்காக கனகராஜன் குளத்தில் நின்றுள்ளது.

இதன்போது பயணிகளை சாப்பாட்டிற்காக இறக்கிய போது பயணிகளில் ஒருவருக்கு வழங்கப்பட்ட கொத்துரொட்டியில் இருந்த இறைச்சியில் புழுக்கள் இருந்துள்ளது.

இக்காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், பல்லரும் விசனக்களை வெளியிட்டுள்ளனர்.