3 மாதங்களுக்கு முன் காணாமல் போன சிறுமி மீட்பு!

கம்பஹா – திவுலபிட்டிய, கொங்கடமுல்ல பிரதேசத்தில் 3மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டதற்கமைய தேடப்பட்ட சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியுடன் இருந்த மற்றுமொருவர் படல்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவுலபிட்டிய கொங்கடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், அவரது தாயார் 3 மாதங்களுக்கு முன்னர் படல்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போன சிறுமி

காணாமல் போன சிறுமியை பொலிஸார் பலமுறை தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன் பின்னர், சிறுமியைக் கண்டுபிடிக்கும் நோக்கில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் பல குழுக்கள் களமிறக்கப்பட்டன.

குறித்த சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் தங்கியிருப்பதாக பொலிஸ் குழுவிற்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.

அதற்கமைய, அந்த இடத்திற்குச் சென்ற பொலிஸ் குழுவினரால்  சிறுமியும், சிறுமியுடன் இருந்த ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட சிறுமி படல்கம பொலிஸாருக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.