பால் புரைக்கேறியதால் உயிரிழந்த குழந்தை!

   பிறந்து 5 நாட்களேயான குழந்தை ஒன்று பால் புரையேறி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குழந்தையின் சடலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகிறதாக கூறப்படுகின்றது.