தென்னிந்தியாவில் கல்வி கற்கும் அசானி!

தென்னிந்தியாவின் பிரபலமான தொலைகாட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப லிட்டில் சேம்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதான் மூலம் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர் தான் மலையக சிறுமி அசானி.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் அசானி தனது கல்வியை தொடர தமிழக அரசியின் அனுமதி பெற்று கல்லூரியில் இணைந்துள்ளார்.

இதன்படி, மலையக சிறுமி அசானி சென்னை – போரூரில் உள்ள அரசினர் மகளிர் கல்லூரில் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை காண்பித்த அசானிக்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகளும் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.