மீண்டும் இலங்கையில் கால்பதிக்கும் எரிபொருள் நிறுவனம்!

63 வருடங்களின் பின்னர் ஷெல் நிறுவனம் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இலங்கையில் மீண்டும் எரிபொருள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

1880ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வந்த ஷெல் எரிபொருள் நிறுவனம் 1961ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தினால் அரசுடைமையாக்கப்பட்டது.

இலங்கையின் எரிசக்தி துறையில் மீண்டும் இணைவு

அதன் பின்னர் குறித்த நிறுவனம் ஆசியாவில் தமது செயற்பாடுகளை இலங்கையிலிருந்து அகற்றி சிங்கப்பூரில் ஆரம்பித்த நிலையில் இன்று சிங்கப்பூரில் மாபெரும் நிறுவனமாக மாறியுள்ளது.

இதன் மூலம் சிங்கப்பூர் எரிசக்தித் துறையில் ஒரு பாரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. எவ்வாறாயினும், அறுபத்து மூன்று வருடங்களின் பின்னர், ஷெல் நிறுவனம் இலங்கையின் எரிசக்தி துறையில் மீண்டும் இணைந்துள்ளது.

இந்நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கப்பல் 63 வருடங்களின் பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிக்கவுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் எரிசக்தி மற்றும் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் கீழ், இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.