கனடா செல்லும் இலங்கையர்களுக்கான செய்தி!

  கனடா தனது பொருளாதார மேம்பாட்டிற்கான உக்தியாக சூப்பர் விசா (super visa ) மற்றும் விசிட் விசா (visit visa)என்பனவற்றை கையாள்கின்றது.

தற்போது இலங்கையில் அரச உத்தியோகத்தில் இருக்கும் பலர் visitor visa வின் மூலம் கனடாவிற்கு வருகைத் தந்து கூலித் தொழிலை செய்து வருகிறார்கள்.

பிற நாடுகளுக்கு செல்லும் போது விசா நடைமுறைகள் பற்றிய சில நுணுக்கமான விடயங்களை நாம் அறிந்திருக்க வேண்டும் அவையாவன, visitors visa வின் மூலம் எந்தவொரு நாட்டிலும் நிலைக்கொள்ள முடியாது.

SIN number அல்லது work permit (temporary) இல்லாமல் வேலை செய்ய முடியாது.

Health card இல்லாமல் ஒரு வைத்தியரை பார்க்கவே, வைத்திய சாலைக்கு போகவோ இயலாது.

ஆகவே பலர் கூறும் போலி வார்த்தைகளை நம்பி பல லட்சங்கள் செலவளித்து கனடா செல்வதைத் தவிர்த்து தனது நாட்டிலேயே தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சிறந்த விடயமாகும் என சமூக நலன் விரும்பி ஒருவர் தெரிவித்துள்ளார்.